தம்பிக்குக் கடிதம்.!
Thi.mu.ka aatchi poruppu yetru irandu naatkal mudinthu vittana.So 'thatha' ithai murasoliyil yeppadi yeluthi iruppar yendru oru chinna 'karpanai'..Basically naa amma anuthaabi..irunthaalum yennudaiya manathai kallaki kondu oru unbiased :-) madal...itho...
தம்பி,
பார்த்தாயா காலத்தின் மாற்றத்தை?
கொடுங்கோல் ஆட்சி நடத்திய கோயபல்ஸ் கூட்டத்தின் கூடாரம் காலி ஆகியதை பார்த்தாயா?
அண்ணா கண்ட உதயசூரியன் உதித்தெழுந்ததைப் பார்த்தாயா?
பார்த்திருப்பாய்.உள்ளம் பூரித்திருப்பாய் என்பதை நானறிவேன்.!
ஆம்,இவர்கள் ஐந்தாண்டுகள் ஆட்சியா நடத்தினார்கள்?
ஆட்சி என்ற பெயரில் அக்கிரமங்கள் அல்லவா அரங்கேற்றம் செய்யப்பட்டன?அராஜகம் அல்லவா அவிழ்த்து விடப்பட்டன?
அண்ணவின் உருவத்தை கொடியில் வைத்துக்கொண்டு, இவர்கள் செய்த அட்டூழியங்கள் தான் என்ன்ன்ன?
அர்த்த ராத்திரியில் நர்த்தனம் ஆடினார்கள்;
கோட்டைக் கொத்தலத்தில் கொடி ஏற்றுவோம் என்று கொக்கரித்தர்கள்;
அண்ணா கண்ட இந்த தி.மு.க, திணருகிறது என்று,செய்தி போட்டார்கள்;
அசைக்கமுடியாத ஆதிக்க சக்தி நாங்கள் என்று, அங்காலைத்தார்கள்;
இறுதி யுத்தம் , எச்சரிக்கை; என்றார்கள்,நம்மைப் பார்த்து;
இன்னும் எனென்னவோ வசை மொழிகள் வாசித்தார்கள்.
அதையெல்லாம் நீ அறிவாய்.உன்னுடைய ஆதங்கத்தை இந்த அண்ணன் நானெறிவேன்.
பெரியாரின் பாசறையில் வளர்ந்து,அண்ணவின் கை பற்றி, அவரிடம் பாடம் பயின்றவர்கள் நாம்;
பொருமை காத்தோம்.! அற வழியில் போராடினோம்.!வழி பிறந்தது.!
ஆம்..உதித்தது உதயசூரியன் உரிமையோடு.!
அறியணை ஏறி இருக்கிறோம் நாம்,பெரியார்,அண்ணாவின் ஆசிகளோடு.!!
தம்பி, இங்கே நான் உனக்கு ஒன்றை நினைவூட்ட கடமைப் பட்டுள்ளேன்.
அண்ணாவில் ஆரம்பித்து, இன்று நாம் ஆறாவது முறையாக ஆட்சியில் அமர்கிறோம்.
ஆதலால்,ஆட்சி நமக்கு புதிதல்ல.ஆட்சிக் கட்டிலும் நமக்கு புதிதல்ல.ஆனால், ஆட்சிக்கட்டிலில் சேர்ந்த ஐந்தாண்டு அழுக்கை அகற்றத் தான் மக்கள் நம்மை அனுப்பி இருக்கிறார்கள்,என்பதை நீ மறந்து விடக்கூடாது.
முந்தய ஆட்சி,
சோம்பேறிகளின் சொர்க்க புரியாக,
ஆதிக்க சக்திகளின் ஆணவக் கூடாரமாக,
சிறு மதியாளற்களின் சங்கர மடமாக,
மமதைகளின் மாமேடையாகவும் இருந்ததால்த் தான், மக்கள் அவர்களை விரட்டி, உன்னை வரவேற்றுள்ளனர் என்பதை நீ மறந்து விடக் கூடாது.
1969 இல் கழக ஆட்சி பொருப்பேற்ற நேரம் அது.தம்பிமார்கள் அரவணைப்புடன் ஆட்சியில்
அமர்ந்தார் நம் அண்ணா.கோட்டையில் கரை புரண்டோடியது கழகக் கண்மணிகளின் உற்சாகம்.
முதல் கழக ஆட்சி அது.நம் அண்ணா பதவி ஏற்கிறார்.
தம்பி,பதவி எற்றவுடன் அண்ணா என்ன சொன்னார் தெரியுமா எஙகளை பார்த்து?
அவர், அந்த உற்சாகத்தில் உழன்று விடவில்லை;
கூட்ட மிகுதியால் குதூகலப்படவில்லை;
மாறாக, அவர் சொன்னார், தம்பி,
இந்நாள் வரை நிம்மதியாக இருந்தோம், இனிமெல் அந்த நிம்மதி போய்விடும் என்றார்.
இதை நீ சிந்தித்து பார்க்கவேண்டும்.
ஆம்,
பொல்லாதவர்கள் நம் மீது பொய் பழி சுமத்துவார்கள்;
வாய்ப்புக் கிடைக்காதா என்று,வல்லுறுகள் வட்டமிடும்;
வதந்தி பரப்புவார்கள்,வசந்தசேனையின் வடிவங்கள்;
தம்பி, நீ விழிதிருக்க வேண்டிய தருணம் இது.!
அதனால் தான் இந்த தேர்தலுக்கு முந்திய செயற்குழு கூட்டத்தில் கூட சொன்னேன்;உனக்கு நினைவிருக்கலாம்;
பேராசிரியருக்கு அடுத்து பேசிய நான் சொன்னேன்;
"நாம் ஆட்சிக்கு வந்தால்,அந்த ஆட்சி நமக்கு
பஞ்சு மெத்தை ஆக இறுக்காது,முள் க்ரீடம் தான்", என்றேன்.
எண்ணிப்பார்க்கிறேன்.நாம் தமிழகதிற்கு செய்ய வேண்டியது எவ்வளவோ இருக்கிறது.
இந்த நாசாதாரிகள் நாசப்படுத்தி விட்டுச் சென்ற நம்முடைய நல்ல பல திட்டங்களை, செப்பனிட வேண்டிய
பொருப்பு நம்மிடம் உள்ளது.அதற்கு நீ,இந்த அண்ணாகிய எனக்கு தோளோடு தோள் குடுத்து துணை நிற்க வேண்டும்.
நம் தந்தை பெரியார்,அறிஞர் அண்ணாவின் கொள்கைகளை மனதில் தாங்கி, தம்பியாகிய உன்னுடைய உழைப்பை இதயத்தில் இருத்தி,கோட்டைப் படிக்கட்டுகலில் கால் வைக்கிறேன்.
எழையின் சிரிப்பில் இறைவனை காண்போம்.!
அன்புடன்,
அண்ணாவின் தம்பி.