justlikethat

Monday, August 14, 2006

கண்ணதாசனும்...கரண்ஜோகரும்...

Nethiki night TV channels aa scan panneettu irunthen...Zee Tv la 'Karan Johar' ooda interview....Nammakku thaan Hindi theriyathe...adutha channel porathukulla, Nanban 'Stay for a while...' nnan..seri nnu 'Karan' vaya paathukittu irunthen...Friend sonnan, Karan thaan "Kabhi Alvidaa Na Kehna" ngra padathoda director...atha pathi thaan interview nnan.."Oho ..ho, seri" nnu kettukitten..
yen nalla kaalathukku, konjam English vaarthaigal appo appo...(Thanks Karan!)

Question : Whats the reason....or what made you to make this kinda movie?Karan:blah...blah....(Surukkama....London restaraunt la oru couple pesittu irukkum pothu 'ottu' kettaraam.....athula Karanukku avaunga rendu perum piriya poranga nnu therinchaam...becuase they dont have 'that' passion in them.:-)
"So that incident triggered me to make a film on this" nnu solli mudichaar.... )

"Athaavathu kalayaanam aana renduperukku manasthabam vantha, sernthu irunthu, antha kashtatha anupavikkanum ngra avasiyam illai" nnu mudichaar.

oru 10 minutes paathen...avlo thaan...yenakku ithu onnum perusa appo thonala....

Thoonga porathukku munnala - nanbi
Kanya, 'Arthamulla Indhumatham' soft copy kettaangale nnu, atha thedi, antha mp3 kettukittu irunthen...Kaaviya Thalaivan... Kaviyarasan urai...sollanuma??? neram poikkitte irukku...konja nerathula athe 'divorce' topic, ingaiyum....yennada ithu nnu yelunthu utkaarnthen...

Kannadasan thitti kumikkiraan,intha foregin kalaachaaratha...."neenga yeenda kalyaanam nnu onnu pannikureenga? ...'contract' basis la pon yedukka vendiyathu thaaane" ngraan....

கடைசியா எனக்குக் குழப்பம் தான் மிச்சம்.!!
அதனால இதுல நான் ஒன்றும் சொல்வதற்கில்லை.!!

கீழே உள்ள கவிதை(???!!!) கவியரசின் எண்ணங்களையும், கரணின் பார்வையையும் சேர்த்து, அதிலே என்னுடைய இடைச் செருகல்களையும் புகுத்தி...ஒரு கொழ..கொழா...


பொருட் குற்றமாயின், பொறுத்தருள்க.!!!


மங்கல வாழ்வில், மாண்புடன் இணைந்தார்.!
நம்பிச் சேர்ந்தார்.! நலம்பல பெற்றார்.!
நாட்கள் நகர்ந்தன, நட்பும் நகர்ந்தது.!
குறைபல கண்டார், ஒருவருக் கொருவர்.!
நிறைகள் என்னவோ, நீர்த்தே இருந்தன.!
நெருங்கி வாழ்தலில், நியாயம் இல்லை;
பிரிந்து வாழ்தலே, பெருமை என்றார்.!

சொல்வீர்.!

திருமண வாழ்வு தேனே.! - எனினும்
அருசுவை உணவிற் கங்கிடம் இல்லை..!
நிறையும் குறையும், நிறைந்தே இருக்கும்.!

பக்குவம் பார்த்து பதமாய்ச் சமைத்தும்,
உப்பின் உவர்ப்பு ஒருகல் உயர்ந்தால்,
குப்பையில் கொட்டுதல் குறைதனைத் தீர்க்குமோ?


சிறுமன உரசலால், சிந்திக்காமல்,
வெட்டல் ஒன்றே விடுதலை என்கும்,
முட்டாள் மனித.! மூன்றுமுடிச்சின் முறைகள் எதற்கு?

குத்தகைக் கெடுத்து, குடும்பம் நடத்தலாம்.!
ஒத்திகை பார்க்கலாம்; ஒதுங்கியே இருக்கலாம்.!
மொத்தமும் முடிந்தபின், மற்றதைத் தேடலாம்.!
பத்திரமான வழிகள் பல உண்டு.!

காட்டிய புன்னகை கண்களில் தொடர,
சூட்டிய மங்கலம், திங்களாய்த் தவழ,
மட்டிலா அன்புடன், மங்காப் புகழுடன்,
கட்டிய ஜோடி கனிவுடன் வாழ்ந்திட,
வெட்டல் தவிர, வேற்று வழி இலையோ?

நன்மதி யுடையோர் நவின்றிடு வீரே.!

-ராம்


Pasting Kanya's Reply here.Extracted from comments section:

இளமை தந்த வேகத்தில்
குறைகள் குற்றமறிந்திடுமோ?
காமனின் அம்புதொட்டு வளரும் மோகத்தில்
அருஞ்சுவை நாவறிந்திடுமோ?

ஆயிரம் காலத்து பொன்பயிரானாலும்
வாடிச் சிதைந்துவிடுமெனில்
உறவென்ற நிலம் இனி விளைந்திடுமோ?
மனமுரசி அன்பு புகைந்திடின்,
தீக்குஞ்சு சிறிதென்றும் பெரிதென்றும் தோன்றிடுமோ?

நிஜமென்று நீ எதை நினைத்தாயோ
அது பொய்யாகிடின்,
நெஞ்சம் நாளை நிமிர்ந்திடுமோ?
நிகழ்காலம் நிலைப்பெற்றிருக்க,
எதிர்காலம் பனையமாகுமோ?

இருவர் கலப்பின் அது காதல் அல்ல.!
இரு மனம் கலப்பதே திருமணமாம்.!
இரண்டும் இன்று வேறுபட்டால்,
ஒன்றாய் அதைப் பார்த்திடல் தகுமோ?

கூடலும் ஊடலும்
வாடிக்கை விளையாட்டு.!
அதில் உருவாகும் செல்வங்கள்,
இன்று விதையாகும் நாளைய விருட்சங்கள்.!

நாம் விரிசல்கள் பூசி மொழுகினால்,
அவர் உணர்வுகள் சிறைப்படுமே.!
சிறைபட்ட மனம் சிறுத்திடின்,
நாளை நிறைகூட குறைபடுமே.!

குறைதேடும் மனம் வந்தால்,
நம் செல்வங்கள் வாடிடுமே.!
வாடும் விதை கொண்டு வளர்திடில்,
அவர்களின் எதிர்காலம் இன்புருமோ?

நம்மக்கள் நாளைகண்டு,
நிஜம்தன்னை ஆட்கொள்வோம்.!
பிரிவதே நிஜமெனில்,
உண்மையாய் வாழ்ந்திடல் இலக்கணமாம்.!

நெஞ்சமே நீ உறவாட,
விரிந்திருக்கும் பூமியிது.!
பழமையை புதுப்பிக்க,
இன்று புண்படாதே பயனென்ன?!


-கன்யா